×

சிக்கலான கட்டத்தில் இந்தியா-சீனா உறவு: வெளியுறவு அமைச்சர் விளக்கம்

முனிச், பிப்.21: இந்தியா-சீனா இடையேயான உறவு சிக்கலான காலகட்டத்தில் இருப்பதாக ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே  போர் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.  இந்நிலையில் ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டின் குழு விவாதத்தில் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கேட்ட ஒரு கேள்விக்கு ஜெய்சங்கர் பதிலளிக்கையில்,‘‘ சீனாவுடன் இந்தியாவுக்கு  பிரச்னை உள்ளது. 45 ஆண்டுகளாக அமைதி நிலவியது. நிலையான எல்லை நிர்வாகம் இருந்தது. 1975ம் ஆண்டுக்கு பிறகு எல்லையில் ராணுவ உயிரிழப்புகள் இல்லை. எல்லைக்கு அருகில் ராணுவ படைகளை கொண்டுவரக்கூடாது என்று சீனாவுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆனால் அந்த ஒப்பந்தங்களை சீனா மீறியது. எல்லையின் நிலை உறவுகளின் நிலையை தீர்மானிக்கும். அது இயற்கையானது. எனவே,வெளிப்படையாக, இப்போது சீனா உடனான உறவுகள் மிகவும் கடினமான காலக்கட்டத்தில் சென்று கொண்டிருக்கின்றன’’ என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் மெல்போர்னில் நடந்த குவாட் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர்,  நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது,‘‘ எழுத்துப்பூர்மாக போட்ட ஒப்பந்தங்களை சீனா மீறியதால்தான் எல்லை பகுதியில் இந்த நிலைமை ஏற்பட்டது. சீனாவின் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் கவலையளிக்கக்கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது’’ என்றார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post சிக்கலான கட்டத்தில் இந்தியா-சீனா உறவு: வெளியுறவு அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,Munich ,Union External Affairs Minister ,Jaishankar ,China ,Ukraine… ,Minister ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...